இந்தியா
Typography

இந்தியாவின் காஷ்மீர் புல்வாமா பகுதியில் பெப்ரவரி 14 ஆம் திகதி இந்திய சீ ஆர் பி எப் வீரர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி அடங்கலாக 3 பேரை சுட்டுக் கொன்று விட்டதாக இந்திய பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வமாவில் உள்ள திரால் பகுதியில் இருக்கும் பிங்கில்ஷ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட இந்திய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காஷ்மீர் போலிசார் ஆகியோர் அக்கிராமத்தை ஞாயிறு அதிகாலை சுற்றி வளைத்து இத்தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இத்துப்பாக்கிச் சண்டையை குறித்த கிராம மக்களும் கேட்டதாக உறுதிப் படுத்தியுள்ளனர்.

கொல்லப் பட்ட புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரி முடாசிர் அகமது கான் என அதிகாரிகள் மட்டுமன்றி முன்னதாக இந்திய உளவுத் துறையினரும் உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும் சுட்டுக் கொல்லப் பட்ட 3 தீவிரவாதிகளிடமிருந்தும் பல ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பவற்றை இந்திய இராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்