இந்தியா
Typography

தமிழக அரசு,  பேஸ்புக் எனப்படும் முகநூல் பக்கத்தைத் துவக்கி உள்ளது. 

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு தனியாக 'பேஸ்புக்' கணக்கை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சாதனைகள், அறிவிப்புக்கள், பணிகள் போன்றவைகள் இடம்பெற உள்ளன.  

இதுகுறித்து அந்தத்துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றமும், வளர்ச்சியும் பெருமளவில் உள்ளன. அதில் முகநூல் என அழைக்கப்படும் 'பேஸ்புக்'கும் உள்ளது. அரசின் அனைத்து செயல்பாடுகளும் உடனுக்குடன் மக்களைச் சென்றடையும் வகையில், முதல்வரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள்  ஆகியவற்றை உடனே 'பேஸ்புக்'கில் பதிவிட்டு வெளியிட செய்தி மக்கள் தொடர்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, TN DIPR என்ற பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு அதன்வழியாக அரசின் பணிகள் குறித்தும், முதல்வரின் அறிவிப்புகளையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்தத் துறை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS