இந்தியா
Typography

நக்சலைட்டுக்கள் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலமான சட்டீஸ்கரில் இன்னும் இரு தினங்களில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு பாதுகாப்பு ஏற்படுகள் பலப் படுத்தப் பட்டுள்ள போதும் இன்று மாவோயிஸ்ட்டுக்களால் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இதில் பாஜக எம் எல் ஏ ஒருவரும் 5 பாதுகாப்பு வீரர்களும் பலியாகி உள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா என்ற இடத்தில் பாஜக எம் எல் ஏ பீமா மாண்டவி இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலை பிரச்சாரம் ஓய்வதற்கு சில மணித்தியாலங்களே இருந்த நிலையில் திடீரென பீமா மாண்டவி பயணித்த வாகனத்தைக் குறி வைத்து மாவோயிஸ்ட்டுக்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பீமா மாண்டவி மற்றும் அவரது பாதுகாவலர்கள் 5 பேர் பலியாகியதுடன் 5 போலிசார் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோசமான தாக்குதலால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். 40 வயதாகும் பீமா மாண்டவி 2014 ஆமாண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தாண்டேவாடா ரிசர்வ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்தி கர்மாவைத் தோற்கடித்திருந்தார். தற்போது இத்தாக்குதலைத் தொடர்ந்து சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்