இந்தியா
Typography

தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடைநீக்க நாடகத்தை ஜெயலலிதா நடத்துகிறார், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு சட்டபேரவையில் கடந்த 17-8-2016 அன்று நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், ஒரு வார காலம் இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.  

இது தமிழக முதல்வர்வரின் எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத செயலாகும் இதுவும் மக்களின் உரிமைகளை பறிப்பதாகும் மேலும் தவறான முன்னுதாரணத்தையே இது ஏற்படுத்தயுள்ளது, இதுவரை நாடாளுமன்றத்தில் கூட எந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் இப்படி ஒட்டு மொத்தமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். இதனைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் நடந்துகொண்டிருப்பது தவறானது. எம்.எல்.ஏக்களின் இடை நீக்க நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், எதிர்க் கட்சியான  தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றமே ரத்து செய்ததோடு இது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின்  அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்று கூறி தமிழக அரசிற்கு குட்டு வைத்தது குறிப்பிடதக்கது.

எதிர்கட்சி உறுப்பினர்களை  ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஊழலில்  திளைத்து நிற்கும் தமிழக அரசு தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே இந்த இடை நீக்க நாடகத்தை ஜெயலலிதா நடத்துகிறார்.

மக்கள் கொடுத்த தீர்ப்பை யார் ஆட்சியில் இருந்தாலும் அதை மதித்து நடத்தல் வேண்டும் ஆகவே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற்று ஜனநாயகத்தை நிலை நாட்டி சட்டசபை நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியாற்றிட முன்வர வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மிகட்சி  தமிழக அரசை வலியுறுத்துகிறது.என்று தெரிவித்துள்ளது தமிழக ஆம் ஆத்மிக் கட்சி.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்