இந்தியா
Typography

 தமிழகம் மற்றும் இந்திய அளவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் மிகவும் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசனும் தமிழகம் முழுதும் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சமீபத்தில் விருதுநகர் வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து சாத்தூரில் கமல் பிரச்சாரம் செய்த போது நீட் தேர்வு மற்றும் அது தொடர்பில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பிலும் வெளிப்படையாகப் பேசினார். இதன்போது அவர் நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல கட்சிகள் நீட் தேர்வு ரத்து என்பதை முன்வைத்து வரும் நிலையில் இக்கோரிக்கையை ஒரு குழந்தை இறக்கும் முதல் மேற்கொண்டிருக்கலாமே என்றும் நீட் தேர்வு தவிர்த்து தமிழகத்தில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல குடி நீர், நல்ல உணவு வேண்டாமா? அதைப் பற்றியும் பேசலாமே எனவும் கமல்ஹாசன் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பு கமல் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ஒரு டீவியில் பொறுப்பின்றி பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசுவது போலவும் கோபமடைந்த கமல் ரிமோட்டைத் தூக்கி வீசி உடைப்பது போன்றும் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. மேலும் அதன் பின் கமல் பேசும் போது "நீட்டால் பிள்ளையை இழந்தவர்களைக் கேளுங்கள் யாருக்கு வோட்டு போட வேண்டும் என சொல்லுவார்கள்" என்றும் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார்.

தற்போது இதற்குப் பதிலடியாக நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா என்ற மாணவின் சகோதரனான மணிரத்னம் தனது ஃபேஸ்புக்கில் இவ்வாறு கூறியுள்ளார்அதில் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக் காரணமாக திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் தொல்.திருமாளவனுக்கே தமது வாக்கு என்றும் இறுதியில் தான் ஒரு கமல் ரசிகன் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்