இந்தியா
Typography

தமிழ்நாடு - புதுசேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 23 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை 18ம் திகதி தேர்தல் நடக்கவிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மொத்தமுள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் தலா இருபது இடங்களில் போட்டியிடுகின்̀றன. மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துள்ளன.

இதேவேளை சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியனவும், மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்று வருவதால், ஆட்சி மாற்றத்திற்கு இக்கட்சிகளும் பெரிதும் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகிறதுதமிழக அரசியல் தலைவர்களாக இருந்து, இந்தியாவையே கவனிக்கவைத்த மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மறைந்துவிட்ட நிலையில், அந்தந்தக் கட்சிகளின் அடுத்தகட்ட தலைவர்கள் தங்களை நீரூபித்துக்காட்ட வேண்டிய களமாக உருவெடுத்திருக்கிறது இந்தத் தேர்தல்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை 135.41 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதுகுறிப்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கு சோதனையிட வந்த காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமமுக அணியினர் அதிமுகவினரே பணத்தை வைத்துவிட்டு இப்போது நாடகமாடுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை வேலூரில் அதிமுக முன்னாள் எம்.எல். கோவி சம்பத், பணத்தை எப்படி ஓட்டுக்காக விநியோகம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிய இரகசிய காணொளி காட்சியும் வெளியாகி பரபரப்பாகியுள்ளதுகட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் இரத்து செய்ததும், ஆனால் அங்கு தேர்தலை நடத்தக்கோரி திமுகவினர் கோரிவருவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்