இந்தியா
Typography

தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இன்று வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

தமிழகத்தில் இரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே உற்சாகத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு (38), தவிர்த்து கர்நாடகா (14), மகாராஷ்டிரா (10), உத்தரப்பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பீகார் (5), ஒடிஷா (5), சட்டீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (2), மணிப்பூர்(1) ஆகிய மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் (1) இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடுமுழுவதும் 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் காலை 08.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்