இந்தியா
Typography

நாடு முழுவதும் இன்று கோகுலாஷ்டமி, கிருஷ்ணஜெயந்தி என்றெல்லாம் அழைக்கப்படும்  கிருஷ்ணர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. 

வட மாநிலங்களில் உறியடித்த திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கிருஷ்ணர் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மக்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து, குழந்தைகளின் கையில் வெண்ணெயை கொடுத்து உண்ணச் சொல்லி கண்ணாரக் கண்டு மகிழ்கின்றனர்.கிருஷ்ணர் படம்  மற்றும் சிலைக்கு முறுக்கு, சீடை, வெண்ணெய், அப்பம் என்று வகை வகையாய் பலகாரம் செய்து வைத்து பக்தி சிரத்தையுடன் வழிப்பட்டு, கிருஷ்ணரை மகிழ்வித்து வருகின்றனர்.

கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில், கிருஷ்ணரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மிகவும் களைக்கட்டிக் காணப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்