இந்தியா
Typography

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ஆலோசனைகள் மேற்கொள்ள ராஜ்நாத் சிங், காஷ்மீர் சென்றுள்ள நிலையில், அங்கு கலவரத்தில் இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார். 

காஷ்மீரில் கடந்த 47 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு தீவிரவாத தலைவர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீரில்  பெரும் கலவரம் மூண்டது. இதில் தீவிரவாதிக்கு ஆதரவானவர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இருப்பினும் வன்முறை அங்கிங்கு என்று நடைபெற்றுத்தான் வருகிறது.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசுடன் அம்மாநில காட்சிகள் சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமைதியை ஏற்படுத்தும் நடைமுறைக் குறித்து ஆலோசிக்க நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றார். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.வன்முறை கல்வீச்சுத் தாக்குதல் போன்ற நிகழ்வுகளுடன் நீடித்து வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS