இந்தியா
Typography

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு பலத்த மழையும் புயல்காற்றும் தாக்கும் என இந்திய வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் புயல் 115 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ஆங்காங்கு கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் தென்கிழக்கு இலங்கையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏப்பிரல் 30 அளவில் தமிழகத்தையும், வடக்குக் கடற்கரையையும் கடக்கவுள்ள வலுவான புயலுக்கு சைக்கிளோன் ஃபானி (Cyclone Fani) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்