இந்தியா
Typography

சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன சம்பவத்தில், கைத் தேர்ந்த ரயில் கொள்ளையர்களின் பெயர்ப்பட்டியலை வைத்து கண்டறிய திட்டமிட்டு உள்ளது சிபிசிஐடி காவல்துறை. 

சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் வந்த வங்கி பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் எந்தவித துப்பும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இவ்வழக்கை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக சிபிசிஐடி போலீசார் இருவரும் சேர்ந்து விசாரித்து வருகின்றனர்.  

துப்பு கிடைக்கமால் விசாரணை தொய்வடைந்து வரும் நிலையில், ரயில் கொள்ளையில் கைத் தேர்ந்த 14 நபர்களின் பட்டியலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைத்து உள்ளனர். இந்த பட்டியலில்  இடம்பெற்றுள்ள நபர்கள் ரயிலின் கழிப்பறை ஜன்னல்களை உடைத்து ரயிலின் உள்ளே வந்து திருடுவதில் கில்லாடிகள் என்று கூறப்படுகிறது.மேலும், இவர்கள் தமிழகம், கொல்கத்தா முமபையைச் சேர்ந்த நபர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்