இந்தியா
Typography

மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய குரல் கொடுக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பாமக. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் பாமக. குழு நேற்று சேர்த்தது. ராமதாஸ் அவர்களின் கடிதத்தைப் படித்த பல கட்சிகளின் தலைவர்கள் மகளிர் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டியதன் தேவையை தாங்கள் உணர்ந்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் ராமதாஸ் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர். 

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தின் நகல் ஊடகங்களின் பார்வை /வெளியீட்டுக்காக அனைத்து வடிவங்களிலும் இத்துடன் இணைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது..

 

BLOG COMMENTS POWERED BY DISQUS