இந்தியா
Typography

கர்நாடகத்துக்கே குடிநீர்ப் பற்றாக்குறை என்கிற நிலை, இதில் தமிழக விவசாயத்துக்கு எங்கே இருக்கிறது தண்ணீர் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். 

திமுக உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் தமிழக விவசாயிகள் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவை சந்தித்து, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அப்போது உடனிருந்த கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் தமிழக விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு எங்கே தண்ணீர் திறந்துவிடுவது என்று கூறியுள்ளார். 

இதையடுத்து பேசிய முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறியுள்ளார். மேலும், மழை பொழியட்டும், இரு மாநிலத்துக்கும் தேவையான அளவு நீர் கிடைக்கும் என்றும் அவர் கூறியதாகத் தகவல் தெரிய வருகிறது.,

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்