தமிழகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரத்தால் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமுள்ள தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி ஒடிசாவைக் கடந்து சென்ற ஃபானி புயலாலும் உலர்ந்த காற்று வீசி வெப்பம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூற்றுப் படி வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனப் பட்டுள்ளது. அதிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த சூறைக் காற்று, மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் இதுவரையிலான கோடைக் காலப் பருவத்தில் மொத்தம் 32 mm மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 62% வீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் சனி இரவு முழுதும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.