இந்தியா
Typography

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியின் பள்ளப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசியதை சர்ச்சைக்குரியதாக எடுத்துக் கொண்ட அரவக்குறிச்சி போலிசார் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கமல்ஹாசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி தலைமையில் விசாரணைக்கு வந்த போது கமலுக்கு எதிராக 3 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். பதிலுக்கு கமல் தரப்பில் இவ்வாறு கூறப்பட்டது. 'இந்த வழக்கால் கமலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காந்தியைக் கொலை செய்த கோட்சே பற்றி மட்டும் தான் கமல் பேசினார். ஒட்டுமொத்த இந்துக்கள் குறித்து அவர் பேசவில்லை.' எனப்பட்டது. ஆனால் அரச தரப்பில் பள்ளப் பட்டியில் பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு வேட்டைக்காகவே கமல் அவ்வாறு பேசினார் எனவும் இதில் உள்நோக்கம் உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வழக்கில் கமலுக்கு எதிராக 76 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரித்த நீதிபதி புகழேந்தி கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எதிர்வரும் 15 நாட்களுக்குள் இதற்குரிய பத்திரங்களை அரவக்குறிச்ச்சி 4 ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை லோக்சபா தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கு பிந்தையய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மிகப் பெரும் செல்வாக்கு கிடைக்கவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதாவது எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகப் பெரும் வளர்ச்சியை அடைய இந்தத் தேர்தல் உதவ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் என்ற இந்த அமைப்பின் கருத்துப் படி தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களைப் பெறும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. சுமார் 36 போட்டியிட்டுள்ள ம நீ ம கட்சி எந்தவொரு இடத்திலும் வெற்றி பெறும் எனக் கணிப்பில் கூறப்படவில்லை. ஆனால் திமுக கூட்டணியின் வாக்குகள் பெரிதளவுக்குப் பிரிவடைய ம நீ ம கட்சி பெரும் செல்வாக்குச் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது மக்கள் நீதி மய்யம் மற்றும் திமுக நேரடியாக மோதிய தொகுதிகளில் தான் திமுக தனது வாக்குகளைப் பெரிதளவு இழக்கக் கூடும் என்று கணிப்பிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்