இந்தியா

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 08 மணி முதல் வெளிவரும் நிலையில், முற்பகல் 11.00 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 327 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் கூட்டணி 107 இடங்களிலும், ஏனைய கட்சிகள் 108 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி (காங்கிரஸ்) 37 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது. அ.தி.மு.க கூட்டணி (பா.ஜ.க.) 2 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கின்றது.

அத்தோடு, 22 தொகுதிகளுக்கு இடம்பெற்ற தமிழக சட்ட மன்ற இடைத் தேர்தலில், தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.