இந்தியா
Typography

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிவரும் நிலையில், மதியம் 01.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 542 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி 339 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது. 

காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களிலும், ஏனைய கட்சிகள் 112 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதிகளில், தி.மு.க. (காங்கிரஸ்) கூட்டணி 37 தொகுதிகளிலும், அ.தி.மு.க. (பா.ஜ.க) கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்