இந்தியா
Typography

அண்மையில் வெளியாகி உள்ள 2019 ஆமாண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். 'தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதது வருத்தம் தான். ஆனால் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என அவர்கள் நிச்சயம் வருந்துவார்கள். எங்களுக்கு இவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கோபம் இல்லை. நாம் எம்மை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளக் கூடிய நிலையில் உள்ளோம். தூத்துக்குடியில் இருந்து நான் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படவில்லை எனினும் இத்தொகுதி மக்களுக்கு என்னால் இயன்ற நண்மைகளைத் தொடர்ந்து செய்வேன்.

தூத்துக்குடியில் மக்களின் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப் படும். தமிழகத்த்ல் பாஜக வலுப்பெறுவது அவசியம். வருங்காலத்திலாவது மக்கள் எம்மைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம், தொடர்ந்து செய்யப் பட்டு வந்த எதிர்ப் பிரச்சாரம் தான்.' இவ்வாறு தமிழிசை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS