இந்தியா
Typography

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது அனைவரின் கவனமும் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதாகவே இருக்கின்றது. 

அமைச்சரவையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு முக்கிய துறை வழங்கப்படும் என்று தெரிகின்றது.

குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா, 5 இலட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க,வின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு அமித்ஷாவின் பங்கு முக்கியமானது. இதனால் புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவிற்கு இடம்தர அதிக வாய்ப்புள்ளது. முக்கிய துறை ஒன்று அமித்ஷாவுக்கு அளிக்க மோடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் கட்சியின் தலைவராக அவரையே தொடர வைக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அமைச்சரவையில் மோடிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த துறை அமித்ஷாவிடம் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி தேசிய பாதுகாப்பு, தேசியம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் பா.ஜ.க, ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வது தொடர்பாக அமித்ஷாவும், மோடியும் ஆலோசித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS