இந்தியா
Typography

காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. 

தமிழகத்துக்கு 50 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தது. எனவே, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வருகிற செப்டெம்பர் மாதம் 2ம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.  

இதற்கிடையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால், தமிழக விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதைக் கர்நாடக அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தாக்கல் செய்திருந்த மனுவை 2 வார காலத்துக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்