இந்தியா
Typography

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதை அடுத்து பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று வியாழக்கிழமை மாலை 07 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார். 

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.க, தலைமையிலான, தே.ஜ., கூட்டணி 352 இடங்களில் வென்றது. பா.ஜ.க, மட்டும், தனியாக, 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து , தே.ஜ., கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரினார் பிரதமர் மோடி. ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதையடுத்து இன்று ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் தர்பார் மண்டபத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு, காங்., மூத்த தலைவர் சோனியா மற்றும் காங்., தலைவர் ராகுல், மாநில கவர்னர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்காள விரிகுடா பகுதி நாடுகளான, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான், மொரீஷியஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், விருந்தினர்களாக பங்கேற்றனர். 'சார்க்' என, அழைக்கப்படும், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பாக். பிரதமர், இம்ரான் கானுக்கு, இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்