இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று வியாழக்கிழமை பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

அதன்படி பிரதமர் மோடியின் கீழ், அரசு ஊழியர் நலன், மற்றும் அணுசக்தி துறை இருக்கும். உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை நிர்மலா சீதாராமனிடமும், வெளியுறவுத்துறை எஸ்.ஜெய்சங்கரிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பா.ஜ.க. மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதன் மூலம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பாஜ தேசிய தலைவரான அமித்ஷா முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவால் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜூம் இம்முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

அமைச்சர்கள் இலாகா விவரம்;

1. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
2. அமித் ஷா - உள்துறை
3. நித்ய ஜெய்ராம் கட்காரி - சாலை போக்குவரத்து துறை
4. டி. வி. சதனாந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
5. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை
6. ராம் விலாஸ் பாஸ்வான் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
7. நரேந்திர சிங் தோமர் - வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை
8. ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு
9. ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்துதல் துறை
10. தாவார் சந்த் கெலோட் - சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
11. டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
12. ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' - மனிதவள மேம்பாட்டுத்துறை
13. அர்ஜுன் முண்டா - பழங்குடி நலத்துறை
14. ஸ்மிருதி இரானி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
15. டாக்டர். ஹர்ஷ் வர்தன் - மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்
16. பிரகாஷ் ஜவேடகர் - சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை
17. பியுஷ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை
18. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை
19. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபாண்மை நலத்துறை
20. பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்
21. டாக்டர். மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
22. அர்விந்த் கணபதி சாவந்த் - கனரக தொழில்துறை
23. கிரிராஜ் சிங் - மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை
24. கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல்சக்தி

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

1. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை
2. கிரண் ரிஜிஜூ - இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை
3. ஹர்தீப் சிங் புரி - வீட்டுவசதி மற்றும் உள்நாட்டு விமானத்துறை
4. மன்குஷ் எல்.மால்டாவியா - கப்பல் போக்குவரத்துறை
5. பிரல்கத் சிங் படேல் - சுற்றுலா மற்றும் காலச்சாரத்துறை
6. ராஜ்குமார் சிங் - மின்துறை
7. ராவ் இந்தர்ஜித் சிங் - திட்டமிடல், மற்றும் புள்ளவிவரங்கள் துறை
8. சந்தோஷ் குமார் கேங்வார் - தொலிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை

9. ஸ்ரீ பத் யஸ்ஸோ நாயக் - ஆயுர்வேதா, சித்தா, யுனானி, யோகா, ஓமியோபதி

இணை அமைச்சர்கள்

1. வி.கே.சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
2. முரளீதரன் - வெளியுறவுத்துறை
3. ராமதாஸ் அதுவாலே - சமூகநீதித்துறை
4. அர்ஜூன் ராம் மேக்வால் - நாடாளுமன்றம் விவகாரம் மற்றும் கனரக தொழில்
5. அனுராக் சிங் தாகூர் - நிதித்துறை
6. அஸ்வினி குமார் சவுபே - சுகாதாரத்துறை
7. பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல்
8. அங்காடி சுரேஷ் சென்னபாசப்பா - ரயில்வே
9. தன்வே ராவ்சாஹிப தாதாராவ் - நுகர்வோர் மற்றும் உணவுத்துறை
10. தியோத்ரி சஞ்சய் சாம்ராவ் - மனிதவள மேம்பாட்டுத்துறை
11. பக்கன் சிங் குலஸ்தி - இரும்புத்துறை
12. கிசன் ரெட்டி - உள்துறை
13. கைலாஷ் சவுபே - விவசாயத்துறை
14. கிருஷண் பால் - சமூகநீதி
15. நித்யானந்த் ராய் - உள்துறை
16. புருஷோத்தம் ருபாலா - விவசாயத்துறை
17. பிரதாப் சந்திர சாரங்கி - சிறு, குறு தொழிற்துறை
18. ரத்தன் லால் கட்டாரியா - ஜல் சக்தி
19. ரமேஷ்வர் தெலி - உணவு பதப்படுத்துதல்
20. ரேணுகா சிங் சருதா - பழங்குடி மேம்பாட்டுத்துறை
21. சாத்வி நிரஞ்சன் ஜோதி - கிராமப்புற மேம்பாட்டுத்துறை
22. சஞ்சீவ் குமார் பல்யான் - விலங்குகள் மேம்பாட்டுத்துறை
23. சோம் பிரகாஷ் - வர்த்தகத்துறை
24. தீபாஸ்ரீ சௌத்ரி - பெண்கள், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“நாம் மிகவும் மதிக்கும் ஒரே சொத்து மனித அபிவிருத்தி என்பதால் எத்தகைய சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும் ´மக்களே முதன்மையானவர்கள்´ என்ற எமது கொள்கையில் சமரசம் செய்ய முடியாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.

புதன்கிழமை விண்ணில் உள்ள ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நாசாவின் இரு வீரர்களை ஏந்தியவாறு SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் Crew Dragon என்ற அதிநவீன விண் ஓடம் செலுத்தப் படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கால நிலை சீர்கேட்டால் இதன் பயணம் சனிக்கிழமை ஒத்திப் போடப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.