இந்தியா

சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதை எதிர்த்து 23 கிராம மக்கள் வாயில் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் பாரத் மாலா என்ற திட்டத்தின் கீழ் ரூ 10 000 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி மற்றும் சேலம் போன்ற 5 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப் படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பித்தது. இத்திட்டத்தால் மிகப் பாரியளவில் விவசாயம் பாதிக்கப் படும் என்ற காரணத்தால் இதற்குத் தடை விதிக்கக் கோரி பாதிக்கப் பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் 50 இற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது.

இதற்கு ஆரம்பத்தில் தீர்ப்பளித்த சென்னை நீதிமன்றம் இந்த பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாகத் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இத்திட்டத்துக்காக கையகப் படுத்தப் பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் மீள அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது. இந்நிலையில் தான் தற்போது இத்தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை நீக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான விசாரணை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.