இந்தியா

வழமையாக ஜூன் 1 ஆம் திகதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இம்முறை 7 நாட்கள் தாமதித்து தொடங்குகின்றது. இன்னும் 24 மணித்தியாலத்தில் தொடங்கவுள்ள இந்தப் பருவ மழை காரணமாக கேரளாவில் சில இடங்களில் சிவப்புன்நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் நாடு முழுவதும் கோடை வறட்சி நிலவி வரும் வேளையில் இந்தப் பருவ மழை கேரளாவில் ஆரம்பிக்கவுள்ளது. சமீபத்தில் தென்மேற்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவக் காற்று வழுவடைந்து வருவதால் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கேரளாவில் பருவ மழை எச்சரிக்கை அதிகபட்சத்துக்கு விடுக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகபட்ச மழைவீழ்ச்சி பெய்யும் என்றும் முன்னறிவிக்கப் பட்டுள்ளது.