இந்தியா

பழம்பெரும் நடிகரும், எழுத்தாளரும், இயக்குனருமான கிரீஷ் கர்னாட் இன்று (திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில்) பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. 

கடந்த 1938ஆம் ஆண்டு மே 19ஆந்தேதி மகாராஷ்டிராவின் மும்பை நகரில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த 1974ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதன்பின் 1992ஆம் ஆண்டு அவர் பத்ம பூஷண் விருது பெற்றார். 1994ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1998ஆம் ஆண்டு ஞானபீட விருதும் பெற்றுள்ளார்.

சிறந்த கன்னட நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுகள், தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்டவற்றையும் அவர் பெற்றுள்ளார்.