இந்தியா

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கைக்கான அண்மைய பயணத்தின் போது கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக்கில் ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்று வருகின்றது. அதில், உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பயங்கரவாதத்தின் ஆபத்தை தடுக்க, அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வரவேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்த போரில், அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, இந்த பிராந்தியத்தில், பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்குப் பின்பு அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெறும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்களுக்கு வருகிற 31ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் லோம்பார்டியாவில் கொரோனா வைரஸ் தொற்றுத் தவிர்ப்புக்கான நடவடிக்கையில் இதுவரை கட்டாயமாக இருந்த முககவசப் பாவனை விலக்கப்படவுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ரஷ்யா அடுத்த மாதம் முதல் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருப்பதாக தெரிகிறது.