இந்தியா
Typography

ஜனவரி முதற்கொண்டு பீஹாரின் முசாபர் நகர் உட்பட பல பகுதிகளில் வேகமாகப் பரவி வந்த மூளைக் காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 109 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

கடந்த மாதம் மட்டும் 11 பேரும் இதைத் தொடர்ந்து சில நாட்களில் 43 பேரும் இந்தக் காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இப்பகுதியில் முறையான சுகாதார நலன்களைப் பேணத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டுள்ளது. இது தவிர மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ச வர்தன், பீகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியவர்களது பெயர்களும் வழக்கில் உள்ளடக்கப் பட்டுள்ளன.

இந்த வழக்கு ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சல் நோயால் தாக்கப் பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் தமிழகத்திலும் இந்த நோய் மர்மமான முறையில் பரவி வருகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் இந்த நோய் பரவாது இருக்க சுகாதாரத் துறை உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்