இந்தியா
Typography

ஊழல் ஒழிப்பு சட்டம் லோக்ஆயூக்தாவை  தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர்  வசீகரன் தலைமையில் காலவரையறையற்ற பட்டினி போராட்டம் நடைப்பெறும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

தமிழக ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (28 ஆகஸ்டு 2016) காலை 10 மணி முதல் சென்னை  ஆம்ஆத்மிகட்சி தலைமை அலுவலகத்தல் துவங்குகிறது. அக்கட்சி ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில்.ஊழல் ஒழிப்பு சட்டம் லோக்ஆயூக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தின் ஆளுநர் உறையில் அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்த உறுதிகொண்டுள்ள இந்த அரசு லோக்பால் சட்டத்தில் குறிப்பிட்ட சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் சட்டம் இயற்றிய பின் உரிய சட்ட வரைமுறையை வகுத்து தமிழ்நாட்டில் லோக்ஆயூக்தா நிறுவபடும் என்று கூறியிருப்பது போகவே முடியாத ஊருக்கு  வழி காட்டுவதாகும்.  

உழலுக்கு எதிரான லோக்ஆயுக்தா கொண்டு வரவே மாட்டோம் என்பதை வெளிப்படையாகவே தமிழக அரசு சொல்லியிருப்பது தெளிவாகிறது.அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பலர் தொடர்ந்து  லோக்பால் சட்டம் கொண்டு வர  வேண்டும் என்று டெல்லியில் போராடியும் காங்கிரஸ், பிஜேபி அரசுகள் லோக்பால் சட்டம்  கொண்டு வர தயாராக இல்லை என்பதை உலகே அறிந்திருக்கும் நிலையில் தமிழக அரசு இப்படி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.  

தமிழக அரசு மக்களை இனியும் ஏமாற்றாமல் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த சட்டசபை தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை  உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.  

ஊழல் மிகை மாநிலமாகதான் தமிழ்நாடு இருக்க வேண்டுமா மக்கள் தான் சிந்திக்க வேண்டும், லஞ்ச ஊழலற்ற தமிழகம் உருவாக்கிட தமிழகத்தை ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அராஜக போக்கிற்கு முடிவு கட்டிட தமிழக மக்கள் அனைவரும் நம் சந்ததிகளின் நலன் மற்றும் நாட்டின்  நலன் மட்டுமே கருதி கட்சி,  இயக்கம், அமைப்புகள், ஜாதி, மதம், இனம், மொழி பாராது இந்த உண்னம போராட்டத்தில் தவறாது பங்கேற்று ஊழல்ஒழிப்பு லோக்ஆயுக்தா உடனடியாக கொண்டு வர தமிழக அரசை நிர்பந்திக்க வேண்டுகிறேன் என்று வசுசேகரன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.  

ஊழல் ஒழிப்பு சட்டம் "லோக்ஆயுக்தா" தமிழக அரசு கொண்டு வரும் வரை  தமிழக ஆம் ஆத்மி கட்சியின் இந்த பட்டினி போராட்டம் தொடரும், தமிழக அரசு  இந்த அமைதி வழி போராட்டத்தை தமக்கு எதிரான போராட்டமாக கருதாமல் தமிழக மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டு கொள்கிறேன்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS