இந்தியா
Typography

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. 

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சன் குழுமத்துக்கு பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை முறைகேடாக கைமாறி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, அப்போது தொலைத்  தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட  5 பேர் மீது பண மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரிக்க போதிய சான்றுகள் உள்ளன என்று டெல்லி சிறப்பு  சிபிஐ நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர் கடந்த ஜூலை  மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், இந்த முன் ஜாமீன் மனுவை விசாரிக்க சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய இரு தரப்பிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்கிற மாறன் சகோதரர்கள் தரப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, இந்த வழக்கை எந்த நீதிமன்றம்  விசாரிக்கலாம் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை செப்டெம்பர் மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்