இந்தியா
Typography

செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு அடுத்து அவருக்கு நன்று தெரிவித்து தனது உரையை ஆரம்பித்தார்.

எதிர்க்கட்சியினரைக் கடுமையாகச் சாடியிருந்த அவரது உரை காரசாரமாக அமைந்திருந்தது. அதன் விபரம் வருமாறு,

'எதிர்க்கட்சியின் செயற்பாடு பாராட்டுக்குரியத் என்ற போதும் வளர்ச்சிக்கான எந்தவொரு வாய்ப்பையும் நாடு தவறவிடக் கூடாது. வலிமை, பாதுகாப்பு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கி எமது தேசத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். 2004 முதல் 2014 இற்கு இடைப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அரசுக்கு நான் நேரடி சவால் விடுகின்றேன். இவர்கள் ஒருபோதும் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் பணியையோ அல்லது நரசிம்மராவ் இன் திட்டங்களைப் பற்றியோ பேசியதில்லை. அவ்வளவு ஏன் தமது கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் பற்றிக் கூட இவர்கள் பேசியது கிடையாது.

நாம் வித்தியாசமாக சிந்திக்கின்றோம். தேசிய வளர்ச்சிக்கு ஒரு சில தலைவர்கள் மாத்திரம் தான் பங்களித்ததாக இவர்கள் எண்ணுவது தவறு. பாஜக அரசு தான் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்தினா வழங்கியது. இன்று ஜூன் 25 அவசர சட்டத்தை விதித்தவர் யார்? இந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. இன்றைய நாளையும் மறக்க முடியாது. ஏனெனில் பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் ஊடகத் துறையையும் முடக்கிய நாள் இன்று.

இதேவேளை எரிவாயு, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து நாம் தான் மக்களைச் சிந்திக்க வைத்தோம். 70 ஆண்டுகளாக எம் தேசம் சென்று கொண்டிருந்த பாதையை 5 ஆண்டுகளில் மாற்றுவது என்பது முடியாது. நமது சுதந்திர போராளிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திரத்தை மிகுந்த விருப்பத்துடன் அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.'

இவ்வாறு பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்