இந்தியா
Typography

தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் இளைஞரணிச் செயலாளராக திமுக கட்சித் தலைவரான ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதனை திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் உறுதிப் படுத்தியுள்ளார். இதற்கு முன்பு திமுக கட்சியின் பத்திரிகையான முரசொலியின் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்து வந்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியைத் தவிர்த்து எஞ்சிய அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் 13 இடங்களில் வெற்றி பெற்றது. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ஸ்டாலினின் தலைமையில் பெறப்பட்ட இந்த முதல் வெற்றியில் பங்களிப்பாக உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரச்சார களப்பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் மக்களவை மற்றும் சட்டமன்ற இடத்தேர்தலுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் உதயநிதி ஈடுபட்டார். இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது மாத்திரமல்லாது உதயநிதியின் பிரச்சாரப் பேச்சுக்கள் சமூக வலைத் தளங்களிலும் மிகவும் வைரலானது. மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியும் முதன்முறை இந்த இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலினுக்கு அளித்திருந்தார். இதே வழியில் கட்சிக்காக அரும்பாடு படும் உதயநிதிக்கும் அதே பதவி வழங்கப் பட வேண்டும் என திமுக உறுப்பினர்களது வலியுறுத்தலுக்குப் பின்பு நீண்ட ஆலோசனைக்குப் பின் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்