இந்தியா
Typography

கேரளாவில் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது கேரளாவில் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்யும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

எச்சரிக்கப் பட்ட இந்த 6 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம் வயநாடு, கண்ணூர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகியவற்றில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் இதன் போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதை விட திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மாநில அரசு சார்பில் எல்லா வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

மறுபுறம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் என மஞ்சல் நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்திலோ நெல்லை, கோவை உட்பட 10 மாவட்டங்களில் இனி வரும் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடியிலுள்ள மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்