இந்தியா
Typography

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக விமரிசிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பாஜக வின் எச் ராஜா மற்றும் தமிழிசை போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் தமிழக அமைச்சர்கள் சிலரும் சூரியாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தனது கருத்துக்கு எதிரான விமரிசனங்களுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'ஒரு குடிமகன் என்ற முறையில் ஒரு சக மனிதனாகத் தான் கல்விக் கொள்கை குறித்துப் பேசினேன். இந்த தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் போன்றோரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாகக் கல்வி மாறி விடக் கூடாது. உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்து விடும். புதிய கல்விக் கொள்கையில் எல்லா விதமான பட்டப் படிப்புக்களுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகின்றது! ஏழை மாணவர்களுக்கு கல்வி தான் உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறியாது பாதுகாக்க அனைவரும் துணை நிற்போம்.'

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்