இந்தியா
Typography

சமீபத்தில் மாரடைப்பால் காலமான டெல்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல் முழு அரச மரியாதையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப் பட்டுள்ளது.

சனிக்கிழமை காலமான ஷீலா தீட்ஷித் இன் உடலுக்கு இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இருந்தார்.

ஷீலா தீட்ஷித் இன் மறைவுக்குத் துக்கம் அனுட்டிக்க டெல்லி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. நேற்று அஞ்சலி முடிந்த பின் ஷீலாவின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு வரப் பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் அனைத்து முக்கிய உறுப்பினர்களும் ஷீலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் அவரின் உடல் யமுனை நதிக் கரையில் உள்ள நிகாம் போத் என்ற மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப் பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்களும் பிரபலங்களும் பங்கு பற்றிக் கொண்டனர்.

இதன் பின் அவரது உடல் முழு அரச மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது. இறுதிச் சடங்கிலும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பற்றினர். காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீட்ஷித் இற்கு 81 வயது ஆகும். டெல்லி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 வருடம் டெல்லி முதல்வராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்