இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் நடவடிக்கை இன்னொரு புல்வாமா தாக்குதலுக்கு வழி வகுக்கும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதாவது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 ஆவது பிரிவு சட்டம் ரத்து செய்யப் பட்டு இருப்பது இன்னொரு புல்வாமா தாக்குதலுக்குத் தான் வழி வகுக்கும் என அவர் இந்தியாவை எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக இருந்த சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக நீக்கி, தனிக் கொடி, தனி சட்டம் இயற்றத் தடை மற்றும் இந்தியர்களால் சொத்து வாங்க முடியாத நிலை போன்றவற்றை உருவாக்கியுள்ளது. இதற்குத் தான் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பில் விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தை பிரதமர் இம்ரான் கான் கூட்டினார்.

அதில் அவர் பேசும் போது, 'இந்திய அரசின் முடிவால் காஷ்மீர் மக்களை நசுக்கி விட முடியாது. பாஜக கட்சி இனவெறி சித்தாந்த அடிப்படையில் செயற்படுகின்றது. இவர்கள் முஸ்லிம்களை 2 ஆம் தர குடிமக்களாக மாற்ற முன்னர் முயன்றார்கள். இதனால் இந்தியாவை இந்துக்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் விரும்புவதை முன்கூட்டியே அறிந்து பாகிஸ்தானை உருவாக்கிய எம் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற விரும்புகின்றேன்.' என்றும் இம்ரான் கான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் முஸ்லிம்களது அந்தஸ்தைப் பறித்து மோசமான முடிவை இந்தியா எடுத்திருப்பதற்கு நாம் ஐ.நாவில் முறையிடுவோம் எனவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதேவேளை ஜம்மு காஷ்மீரைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசம் அமைத்ததற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூயுங் கூறுகையில், ' சமீபத்தில் சீன இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் இந்தியா ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னிச்சையாக சட்ட விதிகளை மாற்றியமைத்துள்ளது. இதை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இரு நாட்டு எல்லை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியா நடந்து கொள்வது அவசியம்.' என அவர் தெரிவித்தார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.