இந்தியா

அண்மையில் நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகியுள்ளார்.

இரு மாதங்களுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்க முடியாததால் பல குழப்பங்கள் நிலவி வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திலும் புதிய தலைவருக்கு யாருடைய பெயரும் பரிந்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் சோனியா காந்தி இடைக்காலத் தலைவியாக நியமிக்கப் பட்டுள்ளார். அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் படும் வரை சோனியா காந்தி தலைவராக நீடிப்பார் என்றும் தெரிய வருகின்றது.
இதேவேளை காங்கிரஸ் கட்சியை மிகவும் சிறப்பாக ராகுல் காந்தி வழிநடத்தினார் என அவரது தொண்டர்களால் உருவாக்கப் பட்ட #ThankYouRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் பிரபலமாகி முதலிடம் பிடித்துள்ளது.