இந்தியா

கேரளாவில் இவ்வருடமும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 86 ஆகியுள்ளது. 1.65 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டு இவர்கள் அனைவரும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ள போதும் பொது மக்கள் கடும் அவதியைச் சந்தித்துள்ளனர்.

கேரளாவில் கனமழை இன்னும் தொடரும் என 9 மாவட்டங்களுக்கு அதிக பட்ச சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது. வெள்ள மற்றும் நிலச்சரிவு அனர்த்தம் காரணமாக மூடப் பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திங்கட்கிழமை திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் இராணுவமும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.

இம்முறை தென்மேற்குப் பருவக் காற்று வலுவாக இருப்பதால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மலைப் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சனிக்கிழமை தகவல் அளித்தார்.

இதில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெவ்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டாலும் ஓரிரு இடங்களில் மாத்திரம் இலேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை தமிழகம், புதுச்சேரியில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இதனால் இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“பொதுத் தேர்தல் முடிவுகளில் நாங்கள் (பொதுஜன பெரமுன) மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறாவிட்டாலும், அதனை பாராளுமன்றத்துக்குள் உருவாக்குவோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்கெடுப்பு, இன்று புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 71 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் உள்ள சரயு நதிக்கரையில் ராமர் கோவில் கட்டப்படும் தொடக்க விழாவை இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. ராமர் கோவில் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்களை வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.

தமிழகம் என்றில்லை; இந்தியா முழுவதுமே கொரோனா நோயாளி இறந்ததும் அவரது உடலை மூடி சீல் வைத்து நெருங்கிய ரத்த உறவுகளை கூட பார்க்க விடாமல் குழிக்குள் போட்டு மூடி விடும் நிலை காணப்படுகிறது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :