இந்தியா
Typography

இவ்வருடமும் கேரளாவைப் புரட்டிப் போட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு மண் சரிவு அனர்த்தத்தில் கிட்டத்தட்ட 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு 3 மாவட்டங்களுக்கு இன்னமும் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை நீட்டிக்கப் பட்டுள்ளது.

மறுபுறம் தமிழகத்திலோ காவிரி நதியின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

அண்மையில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. செவ்வாய் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 253 000 கன அடி தண்ணீர் வருவதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழகக் காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து தமிழகக் காவிரி கரையோரப் பகுதிகளில் தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததுடன் தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தெரிவித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அல்லது அதன் அருகே செல்பி புகைப் படங்கள் எடுக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது தவிர எப்போதும் உதவிக்கு வரும் வகையில் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்