இந்தியா
Typography

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர், இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

செங்கோட்டை வளாகத்திலிருந்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில், " சுதந்திரம் குறித்த எனது சிந்தனை வித்தியாசமானது. மக்களின் வாழ்க்கையை மக்களே வழிநடத்தி செல்ல வேண்டும். மக்களின் வாழ்வில் அரசின் எந்தக் குறுக்கீடும் செய்யாது உதவுவதற்கு மட்டுமே அரசு செயல்படவேண்டும். " என்றார்

அவர் மேலும் பேசுகையில், " எமது அரசு அனைத்து துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்தார் பட்டேலின் கனவு நனவாக்கும் வகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 35ஏ ரத்து ஆகியவற்றைச் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் முன்பு இருந்த முறை ஊழலுக்கு எளிதாக வழி வகுத்தது. மேலும் அங்கு பெண்கள், குழந்தைகள், பட்டியலினத்தவர் ஆகியோரின் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தன. இந்த நிலை மாற்றவே புதிய முடிவு எடுக்கப்பட்டது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தண்ணீரின் முக்கியத்துவத்துவத்திற்காக ‘ஜல் ஜீவன் திட்டம்’ இன்னும் வேகமாக செயல்படும். பயங்கரவாதத்தைப் பார்த்து இந்தியா ஒரு போதும் அமைதியாக இருக்காது. இந்தியாவைத் தனித் தனியாக நினைக்க முடியாது. எனவே நீண்ட கால கோரிக்கையாக உள்ள நாட்டின் முப்படைகளையும் கண்காணிக்கும் ஒரே தளபதி விரைவில் நியமிக்கப்படுவார்.

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் ராஜதந்திரியகளும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்