இந்தியா
Typography

இந்தியா சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தமிழகத்தில் சுந்திரக் கொண்டாட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றித் தொடக்கி வைத்தார். அதன்பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் உரையாற்றுகையில், இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியைக் திணிக்கக்கூடாது. இந்தி திணிப்பிற்கு எதிராக போராடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

நீர் குறித்து பிரதமர் மோடி பேசியது போலவே தமிழக முதல்வரும் தனதுரையில் நீர் குறித்துப் பேசினார். கங்கை சீரமைப்பு திட்டம் போல் காவிரி ஆற்றை சீரமைக்க ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS