இந்தியா
Typography

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரைகளை ஆற்றியுள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், “அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்