இந்தியா
Typography

கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் மாவட்டங்கள் பேரழிவை சந்தித்திருப்பதாகவும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவுகளால் மக்கள் வாழ்விடங்கள் புதைந்து போள்ளதாகவும், செய்திகள் தெரிவிக்கிக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களுக்கான தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் தனித்து விடப்பட்டுள்ள பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உதவிகளை உடனடியாகக் கொண்டு செல்லவும் முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த இயற்கை அனர்த்தங்களில் இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும், பலபேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளுக்கும், முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்குமான நிவாரண உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை கேரள அரசு கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்