இந்தியா
Typography

திமுக எம்பியான கனிமொழி எம்பிக்கு எதிராக பாஜக உறுப்பினர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கனிமொழி எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அறிய வருகிறது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டவர் தமிழிசை சவுந்தரராஜன். இத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்திருந்த நிலையில் கனிமொழியின் வெற்றியை செல்லாது எனக் குறிப்பிட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஒரு சிங்கப்பூர் பிரஜை எனவும், கனிமொழியின் வேட்பு மனுவில், அவரது வருமானம் பற்றிக் குறிப்பிடவில்லை எனவும்,வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, இது குறித்து தான் ஆட்சேபனை தெரிவித்த போதும், தேர்தல் அதிகாரி அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை எனவும், ஆதலால் கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதும் அவர் தொடர்ந்த வழக்கின் குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, கனிமொழி எம்பிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்