இந்தியா
Typography

அண்மையில் உலகளாவிய ரீதியில் வாழத் தகுதியான 140 நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இதில் பாகிஸ்தானின் கராச்சி நகர் மிக மோசமான நாடுகளின் இடத்தில் 136 ஆவது இடத்திலும், நியூடெல்லி 118 ஆவது இடத்திலும் உள்ளன.

நியூடெல்லியின் பின்னடைவுக்கு அங்கு அதிகரித்து வரும் வளி மாசடைவு என்பது கூறப்படுகின்றது. சிரிய தலைநகர் டமஸ்கஸ் உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 7 வருடங்களாக இறுதி இடத்தில் உள்ளது.

ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச் சூழல், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற காரணிகளால் இறுதி 10 இடங்களில் உள்ள நகரங்களின் விபரம் வருமாறு: கராகஸ் வெனிசுலா, அல்ஜியெர்ஸ் அல்ஜீரியா, டௌலா கமெரூன், ஹராரே சிம்பாப்வே, போர்ட் மோர்ஸ்பை, கராச்சி பாகிஸ்தான், திரிப்போலி லிபியா, டாக்கா பங்களாதேஷ், லாகோஷ் நைஜீரியா மற்றும் டமஸ்கஸ் சிரியா.

ஆஸ்ட்ரியா தலைநகர் வியன்னா உலகில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2 ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரும், 3 ஆவது இடத்தில் சிட்னியும், 4 ஆவது இடத்தில் ஒசாக்காவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்