இந்தியா
Typography

இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரமற்றதன்மை, முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றாக அமைந்த வாகன உற்பத்தித்துறையில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் வாகன விற்பனை பெருமளவில் குறைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தி சங்கத் தரவுகளை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் நடைபெற்ற வாகன விற்பனையுடன் ஒப்பிடுகையில், இந்த வருட ஆகஸ்ட் மாத வாகன விற்பனை, 31.57% வீதம் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரவும், கடந்த பத்து மாத காலப்பகுதியில், வாகன உற்பத்தியளவும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலன்ட் தனது உற்பத்தியினை குறிப்பிட்ட சில தினங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்