இந்தியா
Typography

சந்திராயன் 2 மூலம் அனுப்பிவைக்பெற்ற விக்ரம் லேன்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் தருணத்தில் தொடர்பற்றுப் போனது.

தொடர்பற்ற நிலையில் விகரம் லேண்டருக்கு என்ன ஆனது என்பது பெரும் குழப்பமான நிலையில், சந்திராயன்2 மூலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆர்பீட்டர் அனுப்பி படங்கள் மூலம், விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் வீழ்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றார்கள்.

நிலவின் இரவுக்காலம் ஆரம்பமாகி குளிர்நிலை அதிகரிப்பதற்கு முன்னதாக நிலவின் பகற்காலத்திற்குள் விக்ரம் லேண்டருடனாகன தொடர்பை பெற்றுவிடப் போராடி வருகின்றனர். இதன் மற்றுமொரு செயற்பாடாக நிலவை வலம் வரும் ஆர்பீட்டரை, நிலவுக்குச் சமீபமாக சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்தில் வலம் வருவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதாக அறிய வருகிறது. ஆர்பீட்டர் தற்போதுள்ள நிலையில்யிருந்து நிலவுக்குச் சமீபமாக வருகையில், விக்ரம் லேண்டரை மேலும் துல்லியமாகப் படம்பிடிக்கவும், அதன் மூலம் அதன் நிலை குறித்து அறியவும் முடியும் என நம்புவதாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்