இந்தியா
Typography

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டி, வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொண்டு திரும்பிருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அவ்வாறு வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் அந்த விபரங்களை அவர் வெளியிடுவாராயின், அவருக்கு திமுக சார்பில் பாராட்டுவிழா நடத்துவோம் என தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணத்தை முடித்து, நாடு திரும்பிய முதலமைச்சருக்கான வாழ்த்து விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியதாகவும் தெரியவருகிறது. தமிழகத்தின் இன்றைய அந்நிய முதலீடுகள் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை. ஆனால் அவை மறைக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அத்தகைய முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் எவை?. இதன் மூலம் வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் எத்தனை என்பது குறித்த விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றினை முதல்வர் வெளியிடத் தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சித்தலைவர், இதற்கானஉண்மையான பதில்களை வெள்ளையறிக்கையாக முதல்வர் சமர்பிப்பரேயானால், அவருக்கான பாராட்டுவிழாவினை திமுக சார்பில் நடத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளதாக அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்