இந்தியா

இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் தேஜஸ். மிக் 21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக இந்தியாவில் தாயரிக்கப்பட்டவை.

மணிக்கு 2 ஆயிரம் கீலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பறக்கக் கூடிய திறன் பெற்ற இவ்விமானத்தில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்ததின் மூலம், தேஜஸில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எனும் பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்

விமானப்படை வீரர்களின் உடையணிந்து, விமான படை தளபதி என்.திவாரியுடன், பெங்களூர் எச்.ஏ.எல் விமான தளத்தில் இருந்து, இந்த விமானப் பறப்பினை மேற்கொண்ட ராஜ்நாத் சிங், மிகச் சிறந்த அனுபவமாகவும், இந்தியத் தொழில் நுட்பம் குறித்த பெருமையை உணர்வதாகவும், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.