இந்தியா
Typography

என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். பதவிகளுக்கும், பொறுப்புக்களுக்கும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வது அவசியம். பூக்கடையில் வேலை பார்ப்பவரை பட்டாசு கடையில் வேலைக்கு அமர்த்தினால் வேலை தான் கெட்டு போகும் என நடிகர் விஜய் கூறினார்.

விஜயின் அடுத்த படமான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் பேசும் போதே இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தினர், பாடலாசிரியர் விவேக், ஆகியோருடன் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விஜய் அங்கு மேலும் பேசுகையில், பேனர் விழுந்து, ஒரு பெண்ணின் உயிர் பறிபோக உண்மையான காரணமானவர்கள் மீது கோவங்கொள்ளாமல், லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுவதும், கோபங்கொள்வதும் எவ்வகையான நியாயம் எனக் கேட்டார். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார்.

விஜயின் இந்தப் பேச்சுக் குறித்துக் கருத்துத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS