இந்தியா

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் சுமார் 50 000 இந்திய அமெரிக்கர்கள் ஒன்று கூடிய 'மோடி நலமா?' என்று பொருள் படும் 'ஹௌடி மோடி' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் இதன் போது இவர்கள் இருவரும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். இன்று ஹூஸ்டன் விமான நிலையத்தை மோடி வந்தடைந்த போது அவருக்கு சிவப்புக் கம்பளத்தில் உற்சாக வரவேற்பை இந்திய, அமெரிக்க அதிகாரிகள் அளித்தனர். மேலும் மோடி மைதானத்தை வந்தடைந்த போது பலத்த கரவொலியுடன் உற்சாகக் குரல் எழுப்பி மக்கள் அவரை வரவேற்றனர். அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் பிரதமர் மோடியை வரவேற்று பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே இருக்கின்றது. பிரதமர் மோடியுடன் இந்திய கலாச்சார உறவையும் கொண்டாடுவதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.' என்றுள்ளார். இதேவேளை இன்று டிரம்ப் உரையாற்றுகையில் இந்திய அமெரிக்க வர்த்தக நல்லுறவு தொடர்பில் முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஏற்கனவே இன்றைய டெக்ஸாஸ் இண்டியா போரம் அமைப்பு நடாத்தும் ஹௌடி மோடி நிகழ்வில், பங்க்ரா கலைஞர்களது உற்சாக நடனம் ஆடப் பட்டது. மேலும் பரத நாட்டியம், குச்சிப்புடி போன்ற நடன நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணி தொடங்கி 11.30 மணி வரை நடக்கவுள்ள இந்நிகழ்வில் மோடியை வரவேற்கும் விதத்தில் குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை சுமார் 1000 கலைஞர்கள் ஆடவுள்ளனர். இது தவிர 90 நிமிடம் நீடிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

மறுபுறம் மோதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்,' காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவு அமைப்புகள், இந்திய - அமெரிக்க இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தும் உள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எம்.ஏசுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளர்களின் அவலங்களுக்காக இணையவழியில் போராட்டம் நடத்துவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸ் சமூகத் தொற்று குறைந்தது எனக் கூறப்பட்டாலும், மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக எழுந்தது புலம் பெயர் தொழிலாளர்களின், சொந்தமாநிலங்களுக்கான நகர்வுகள்.

இத்தாலியின் வடக்கு பிராந்தியங்களான லோம்பார்டி, லிகுரியா மற்றும் பீட்மோண்ட் ஆகியவற்றில் ஜூன் 3 ஆம் தேதி பயணக் கட்டுப்பாடுகளை பாதுகாப்பாக அகற்றத் தயாராக இல்லை என்று இத்தாலியின் குழுமத்திற்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தின் புதிய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.